பிஎம்டபிள்யூ எக்ஸ் 7
2023-01-27@ 15:42:40

பிஎம்டபிள்யூ நிறுவனம், எக்ஸ் 7 பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் ெசய்துள்ளது. இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 3.0 லிட்டர், 6 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 5,200 முதல் 6,250 ஆர்பிஎம்-ல் 375 பிஎச்பி பவரையும், 1,850 முதல் 5,000 ஆர்பிஎம்-ல் 520 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுபோல், 3.0 லிட்டர் டீசல் இன்ஜின், 4,400 ஆர்பிஎம்—335 பிஎச்பி பவரையும், 1,750 முதல் 2,250 ஆர்பிஎம்-ல் 700 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இரண்டுமே 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் பிஎம்டபிள்யூவின் எக்ஸ்டிரைவ் ஆல் வீல் டிரைவுடன் வருகிறது.
இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில், ஸ்பிளிட் எல்இடி ஹெல்லாம்ப்கள், முன்புற பம்பர், கிரில் ஆகியவை புதிய தோற்றப்பொலிவை அளிப்பதாக உள்ளன. கேபின் பகுதியில் வளைவான டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளே வலது புறம் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இடது புறம் 14.9 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம் என இரண்டு பிரிவுகளாக அமைக்கப்பட்டள்ளது. ஷோரூம் விலையாக பெட்ரோல் கார் ரூ.1.22 கோடி எனவும், டீசல் கார் ரூ.1.25 கோடி எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags:
பிஎம்டபிள்யூ எக்ஸ் 7மேலும் செய்திகள்
மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி 53
புதிய வெர்னா
காவாசாக்கி எலிமினேட்டர் 400
சிட்ரான் இ-சி3 எலக்ட்ரிக் கார் அறிமுகம்
டாடா ஹாரியர்
ராயல் என்பீல்டு இன்டர்செப்டர், கான்டினென்டல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!