SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இணைய தளத்தில் பதிவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியானது

2023-01-27@ 00:32:51

புதுடெல்லி: ஆயிரத்திற்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்  தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ பிராந்திய மொழிகளில் நேற்று வெளியிடப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழியெர்த்து வெளியிட ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக தமிழ், இந்தி, குஜராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு பணிகளை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தின் அலுவல்கள் தொடங்கியவுடன வழக்கறிஞர்களிடம் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், 1268 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருப்பதாகவும் குடியரசு தினத்தை ஒட்டி இந்த தீர்ப்புகள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

இதன்படி, நேற்று தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வெளியானது. தமிழில் 52, அசாம் மொழியில் 4, இந்தி - 1554, கன்னடம் - 17,  மலையாளம் - 29,. மராத்தி - 14, ஒடியா - 21, பஞ்சாபி - 4 , தெலுங்கு - 28, உருது மொழிகள் 3 தீர்ப்புகள் உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.  மற்ற மொழிகளிலும் தீர்ப்புகளை மொழிபெயர்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்