கலப்பு இரட்டையரில் இறுதி போட்டிக்கு தகுதி; பட்டம் வெல்ல விரும்புகிறேன்: சானியா மிர்சா பேட்டி
2023-01-26@ 17:06:03

மெல்போர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சானியாமிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி, இங்கிலாந்தின் நீல் ஸ்குப்ஸ்கி, அமெரிக்காவின் டெசிரே க்ராவ்சிக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 52 நிமிடம் நடந்த இந்த போட்டியில், சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி 7-6(5), 6-7(5), 10-6 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
வரும் 28ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி, ரபேல் மாடோஸ் ஜோடியை எதிர்த்து விளையாட உள்ளது. நேற்று வெற்றிக்கு பின் சானியா மிர்சா கூறியதாவது: எனக்கு 14 வயதாக இருந்தபோது போபண்ணா தான் என்னுடைய முதல் கலப்பு இரட்டையர் பார்ட்னர். இன்று எனக்கு 36 வயது, அவருக்கு வயது 42. எங்களிடம் உறுதியான பார்ட்னர்ஷிப் உள்ளது. நாங்கள் சிறந்ததைக் கொண்டு வர வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும், நாங்கள் அதைச் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.நான் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன். நான் கடந்த 18 ஆண்டுகளாக இங்கு(ஆஸி.ஓபன்) இருக்கிறேன்.
இது எனக்கு வீடு போல் இருக்கிறது. இது ஒரு சிறந்த பயணம், நான் இங்கு திரும்பி வருவதை இழக்கப் போகிறேன். இது எனது கடைசி கிராண்ட்ஸ்லாம் என்பதைப் பொருட்படுத்தாமல் நான் வெற்றி பெற விரும்புகிறேன்:, என்றார். போபண்ணா கூறுகையில், ”நாங்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்க வேண்டும், இந்தியாவிலும் அது தேவை,பட்டம் வெல்வது தான் அதைத் தொடர ஒரே வழி என்று நான் நினைக்கிறேன், என்றார்.
மேலும் செய்திகள்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக ஷ்ரேயாஸ் விலகல்: சிக்கலில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
2-1 என ஒரு நாள் தொடரை இழந்ததால் தரவரிசையில் முதல் இடத்தை இழந்த இந்தியா: ஆஸ்திரேலியா நம்பர் 1 இடத்தை பிடித்தது
உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட்: நடராஜனுக்கு வாய்ப்பு
ஐபிஎல் கோப்பை ஆர்சிபி அணிக்குதான்: ஸ்ரீசாந்த் சொல்கிறார்
ஆஸ்திரேலியாவுடனான 3 ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்திலேயே அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்தார் சூரியகுமார் யாதவ்
பதக்கம் உறுதி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!