ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 106 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு
2023-01-26@ 11:39:13

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான, 106 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 27.2.2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, கழக அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான K.A. செங்கோட்டையன், M.L.A., தலைமையில், கீழ்க்கண்டவர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள்.
டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் கே.பி. முனுசாமி, M.L.A., திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A., நத்தம் இரா. விசுவநாதன், M.L.A., முன்னாள் அமைச்சர்C. பொன்னையன், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் மு. தம்பிதுரை, M.P., பி. தங்கமணி, M.L.A., முன்னாள் அமைச்சர் S.P. வேலுமணி, முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன், M.L.A., முன்னாள் அமைச்சர் D. ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் C.Ve. சண்முகம், M.P., முன்னாள் அமைச்சர் செ. செம்மலை, முன்னாள் அமைச்சர் என். தளவாய்சுந்தரம், M.L.A., முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, முன்னாள் அமைச்சர் செல்லூர் K. ராஜூ, M.L.A., தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் தலைவர் ப. தனபால், M.L.A., K.P. அன்பழகன், M.L.A., மேலும் பலர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிப்பு, தகுதி நீக்கம் ஆகியவற்றை கண்டித்து நாளை சத்தியாகிரக போராட்டம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிவிப்பு
அன்று தலைவர் பதவியில் இருந்து விலகல்... இன்று எம்பி பதவி தகுதி நீக்கம்: ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?
அதானி குறித்த எனது பேச்சை கண்டு பிரதமர் மோடியின் கண்களில் பயம் தெரிந்தது: தகுதி நீக்கம் தொடர்பாக ராகுல்காந்தி பேட்டி!
சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் :முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!
தொழில்நுட்ப வளர்ச்சியால் வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் :ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேச்சு!!
கர்நாடக சட்டமன்ற தேர்தல்: 124 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி