மாநில கல்வி கொள்கை வரைவு அறிக்கையை ஏப்ரலில் அரசிடம் அளிப்போம்: ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தகவல்
2023-01-26@ 01:22:51

சென்னை: ஏப்ரல் மாதம் இறுதிக்குள் மாநில கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிட்டு இருக்கிறோம் என்று மாநில கல்விக் கொள்கைக் குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் கூறினார். அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கருத்துகளை மாநில கல்விக் கொள்கைக் குழு நேற்று கேட்டது. இதற்கான நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்க வளாகத்தில் நடந்தது.
இது குறித்து மாநில கல்விக் கொள்கைக் குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் அளித்த பேட்டி: அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும் என்று சிலரும், தனித் தனி பாடத்திட்டமாக இருக்கலாம் என்று சிலரும் கருத்துகளை தெரிவித்தனர். மாநில கல்விக் கொள்கை வரைவு இறுதி அறிக்கை தயாரிக்கும் பணிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் இறுதிக்குள் மாநில கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
மேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி தீவிரம்..!!
இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் 37,000 வாகனங்களில் இருந்த முறையற்ற வாகன பதிவு எண்கள் சரி செய்யப்பட்டன: போக்குவரத்து காவல்துறை தகவல்
ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாநில அளவிலான வனத்தீ மேலாண்மை குறித்த கருத்துப் பட்டறை
அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் விளக்கு பகுதி காவலர் குடியிருப்புக்கு ஆபத்து?.. சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!