திருவெள்ளைவாயல், தேவதானம் கோயில்களில் அமைச்சர் ஆய்வு
2023-01-26@ 01:18:40

சென்னை: மீஞ்சூர் அருகே திருவெள்ளைவாயல், தேவதானம் ஆகிய கோயில்களில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தி விரைவில் கோயில்களில் குடமுழுக்குவிழா நடைபெறும் என அமைச்சர் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த திருவெள்ளைவாயல், தேவதானம் ஆகிய பகுதிகளில் உள்ள இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
1000 ஆண்டுகளுக்கு முன்பு சாளுக்கியர் மன்னர்களால் கட்டப்பட்ட வடஸ்ரீரங்கம் தேவதானம் ரங்கநாயகி சமேத ரங்கநாதர் ஆலயம், 1200 முன்பு பராந்தகர் சோழர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட திருவெள்ளைவாயல் சாந்தநாயகி உடனுறை திருவெள்ளீஸ்வரர் கோயில் அங்குள்ள குளங்களையும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, திருவெள்ளைவாயல் திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு நடைபெற்று பல ஆண்டுகளான நிலையில். இதற்கான, திட்டமிடல் நடைபெற்று வருகின்றன. 2 மாதங்களுக்குள் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் முடிவுற்று குடமுழுக்கு செய்யப்படும். நூறாண்டுகள் பழமை வாய்ந்த கோயில்களுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டு 104 கோயில்களுக்கு குடமுழுக்குகளும் நடைபெறவும் தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களை புனரமைப்பதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பேசினார். இந்த ஆய்வின்போது பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன்இருந்தனர்.
மேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி தீவிரம்..!!
இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் 37,000 வாகனங்களில் இருந்த முறையற்ற வாகன பதிவு எண்கள் சரி செய்யப்பட்டன: போக்குவரத்து காவல்துறை தகவல்
ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாநில அளவிலான வனத்தீ மேலாண்மை குறித்த கருத்துப் பட்டறை
அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் விளக்கு பகுதி காவலர் குடியிருப்புக்கு ஆபத்து?.. சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!