தொடக்க கல்வித்துறை சார்பில் ரூ.240 கோடி மதிப்பில் பள்ளி கட்டுமான பணிகள்: முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்
2023-01-26@ 01:10:27

சென்னை: தொடக்கக் கல்வித்துறைக்காக ரூ.240 கோடி மதிப்பில், புதிய பள்ளிக் கட்டிடங்களை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த வாரம் தொடங்கி வைக்க உள்ளார். தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பழைய கட்டிடங்களை மாற்றி புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், தொடக்க கல்வி வராலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ. 800 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வெளியிட்ட அரசாணையின் படி முதற்கட்டமாக ரூ. 240 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டுவிழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க இருக்கிறது. இதன்படி தமிழகத்தில் 185 பள்ளிகள் கட்டும் பணி தொடங்கும். அடிக்கல் நாட்டும் விழா பிப்ரவரி 2ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடக்க இருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த பள்ளியில் அடிக்கல் நாட்டும் அதே நேரத்தில் மேற்கண்ட 185 பள்ளிகளிலும் காணொளி மூலம் அடிக்கல் நாட்டும் பணிகள் தொடங்கும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்பார்கள்.
மேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி தீவிரம்..!!
இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் 37,000 வாகனங்களில் இருந்த முறையற்ற வாகன பதிவு எண்கள் சரி செய்யப்பட்டன: போக்குவரத்து காவல்துறை தகவல்
ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாநில அளவிலான வனத்தீ மேலாண்மை குறித்த கருத்துப் பட்டறை
அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் விளக்கு பகுதி காவலர் குடியிருப்புக்கு ஆபத்து?.. சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!