தலைமை நீதிபதி பரிந்துரையின்படி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 1,268 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்: இன்று வெளியாகிறது
2023-01-26@ 00:20:57

புதுடெல்லி: குடியரசுத் தினமான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 1,268 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வெளியிடுகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழியில் வெளியிடப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இதனை வரவேற்றிருந்தனர். தீர்ப்பை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஓகா தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அலுவல்கள் நேற்று தொடங்கியவுடன் வழக்கறிஞர்களிடம் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ``உச்ச நீதிமன்றத்தின் மின்னணு துறை சார்பாக சுமார் 34,000 தீர்ப்புகள் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புகளை மக்கள் இலவசமாக பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல்கட்டமாக 1,268 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட இருக்கிறது.
குடியரசு தினத்தன்று அந்த தீர்ப்பு வெளியிடப்படும். இந்தியில 1091, தமிழில் 52, மலையாளத்தில் 29, தெலுங்கில் 28, கன்னடத்தில் 17, ஒடியாவில் 21, மராத்தியில் 14, அசாமியில் 4, உருதுவில் 3, நேபாளியில் 3, பஞ்சாபியில் 4 என தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் 22 மொழிகள் உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்புகளும் பிராந்திய மொழிகளில் வெளியிடப்படுவதற்கான பணிகள் மேலும் துரிதப்படுத்தப்படும். வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்,’’ என்று கூறினார்.
மேலும் செய்திகள்
அதானி, பிரதமரின் நண்பர் இல்லையெனில், விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது தானே?.. ராகுல் காந்தி விளாசல்..!
குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை நீக்கத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
இந்தியாவில் 76.5 கோடி பேருக்கு கொரோனாவா?.. விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ நடவடிக்கை: ஒன்றிய அரசு
அவைக் குறிப்பில் இருந்து ராகுல் காந்தி பேசியதை நீக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தல்
உதான் திட்டத்தில் ஓசூர் விமான நிலையம் இடம்பெறாது என அறிவிப்பு: தமிழ்நாட்டை புறக்கணிப்பதாக திமுக புகார்..!
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!