சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ சாவு
2023-01-26@ 00:17:09

சிதம்பரம்: சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ நேற்று அதிகாலை திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர் முருகப்பிரியா நகரில் வசித்து வந்தவர் மகேந்திரன் (59). இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. 1986ல் காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர் பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், கிள்ளை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்துள்ளார்.
சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாக சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் நகர காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது இரவு ரோந்து பணியை முடித்துவிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு மேல் காவல் நிலையத்துக்கு வந்தவர், திடீரென சுருண்டு விழுந்தார். உடனடியாக மற்ற காவலர்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது மறைவு குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
வேலூர் கொணவட்டத்தில் சாலையோரம் இறைச்சி கழிவுகளுடன் மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக வீச்சு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தர்மபுரி அருகே கிராமத்திற்குள் புகுந்த ஆண் யானை: மக்கள் பீதி; கும்கி கொண்டு பிடிக்க ஆலோசனை
வருசநாடு அருகே மூல வைகை ஆற்றில் மீன்பிடி தொழில் ஜோர்: மீன் கிலோ ரூ.600; நண்டு ரூ.500க்கு விற்பனை
நாகை அருகே தெருவில் பூட்டி இருந்த வீட்டில் திடீரென மேற்கூரை தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு: போலீசார் விசாரணை
குமரியில் கந்து வட்டி தொழிலில் கொடி கட்டி பறக்கும் பெண்கள்: காவல்துறை விசாரிக்க தயக்கம்
இரட்டை ரயில்பாதை பணிகளுக்காக மாற்றுப்பாதையில் பல்வேறு ரயில்கள் இயக்கம்
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!