பழங்குடியினர் உன்னிக்குச்சி மூலம் தளவாடப்பொருள் தயாரிக்க ரூ.1.80 கோடி செலவிடப்படும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு
2023-01-26@ 00:03:25

சென்னை: பழங்குடியினர் வருவாய் ஈட்டும் பொருட்டு உன்னிக்குச்சி மூலம் தளவாடப் பொருட்கள் தயாரிக்க ரூ.1.80 கோடி செலவிடப்படும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் உள்ள உன்னிக்குச்சி செடிகளின் பிரம்பினை பயன்படுத்தி செய்யப்படும் மேசை, நாற்காலி, சோபா உள்ளிட்ட பல்வேறு தளவாடங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
இத்தகைய பொருட்களை செய்வதற்கு தகுந்த பயிற்சிகள் அளித்தல், உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் வாங்குதல் சந்தைப்படுத்துதல் ஆகிய பணிகளை உள்ளடக்கிய பணிகளுக்கு ரூ.1.80 கோடி செலவிடப்படும். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், பழங்குடியின மக்கள் வருமானம் ஈட்டும் வகையிலும், தொடர்ச்சியான வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டும், உன்னிக்குச்சி மூலம் தளவாடப் பொருட்கள் தயாரிப்பதற்கு, ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.75,00,000, நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.60,90,000, ஆக மொத்தம் ரூ.1,35,90,000 விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது. உன்னிக்குச்சி மூலம் தளவாடப் பொருட்கள் தயாரிப்பது தொடர்பான நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சுமார் 310 பழங்குடியின குடும்பங்கள் பயன்பெறுவர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி தீவிரம்..!!
இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் 37,000 வாகனங்களில் இருந்த முறையற்ற வாகன பதிவு எண்கள் சரி செய்யப்பட்டன: போக்குவரத்து காவல்துறை தகவல்
ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாநில அளவிலான வனத்தீ மேலாண்மை குறித்த கருத்துப் பட்டறை
அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் விளக்கு பகுதி காவலர் குடியிருப்புக்கு ஆபத்து?.. சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!