SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்த வழியில் இந்தி திணிப்பு இருந்தாலும் உயிரை கொடுத்தாவது தமிழ்மொழியை காப்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

2023-01-26@ 00:03:15

சென்னை: எந்த வழியில் இந்தி திணிப்பு இருந்தாலும் உயிரை கொடுத்தாவது தமிழ்மொழியை காப்போம் என மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள், வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் நேற்று நடந்தது. மாவட்ட திமுக செயலாளர் இளைய அருணா தலைமை வகித்தார். இதில், திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், எம்பி கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், ேஜ.ஜே. எபினேசர், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் பாண்டிச்செல்வம், பகுதி செயலாளர்கள் செந்தில்குமார், வ.பெ.சுரேஷ், ஜெபதாஸ் பாண்டியன், சென்னை மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருது கணேஷ், மாவட்ட அவைத்தலைவர் வெற்றி வீரன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இளைஞர்கள் சிலர் இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்ற டி-சர்ட்டுடன் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: மொழிப்போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி வருகிறோம். பெரியார் என்றாலும் ஒருவர் தான், அண்ணா என்றாலும் ஒருவர் தான், கலைஞர் என்றாலும் ஒருவர் தான், தளபதி என்றாலும் ஒருவர் தான். என் மீது உள்ள அதீத அன்பு காரணமாக நீங்கள் கொடுக்கும் பட்ட பெயரால் நான் படும்பாடு இருக்கே, அதிகம். உலக வரலாற்றில், மொழிக்காக உயிர் தியாகம் செய்த மண் தமிழ் மண், அத்தகைய மொழி முக்கியம் கொண்ட மண். மொழிப்போர் போராட்டம், மாத கணக்கில் இல்ல, ஆண்டுக் கணக்கில் நடக்கும் என்று அண்ணா சொன்னார். இந்தி திணிக்க முயற்சிக்கும் சங்கிகளுக்கு ஒன்றை சொல்கிறேன். எந்த வழியில் இந்தி திணிப்பு இருந்தாலும் உயிரை கொடுத்தாவது தமிழ்மொழியை காப்போம். தமிழுக்கு திமுக கழகம் என்ன செய்தது என்று வரலாறு தெரியாத சிலர் கேட்கிறார்கள்.

உயிர் தியாகம் செய்துள்ளது, துப்பாக்கி குண்டுகளை வாங்கி உயிர் போனது. உள்துறை அமைச்சர் அமித்ஷா அலுவல் மொழியாக ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி என்று சொன்னார். அதற்கு முதன்முதலாக எதிர்ப்பு தெரிவித்தவர் நமது முதல்வர். தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினோம். அதை பார்த்து அண்டை மாநிலத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. மோடி பாரதியார் பாடல்களை சொல்லி பேசுகிறார். ஆனால் அதுபோல நடந்து கொள்வது இல்லை. வாயிலேயே வடை சுடுபவர் பிரதமர். (அப்போது மத்திய அரசு திட்டங்கள் இந்தியில் உள்ளதை சுட்டிக்காட்டி பேசிய உதயநிதி ஸ்டாலின் இது யாருக்காவது புரிகிறதா எனக்கேட்டார்). 23 ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருத மொழிக்கு 600 கோடி ரூபாய் வளர்ச்சிக்கு கொடுக்கிறது ஒன்றிய அரசு. 8 கோடி பேர் பேசும் தமிழ்மொழிக்கு 23 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிதான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்