SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு திட்ட பணிகளுக்காக ரூ.1083.18 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

2023-01-26@ 00:36:56

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர்த்  திட்டம், கழிவு  நீர்  சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய  பாதாள சாக்கடைத் திட்டம், பசுமை வெளிகள் மற்றும் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் நீர் நிலைகளை மேம்படுத்துதல் பணிகளுக்கு ரூ.1083.18 கோடி நிதி  ஒதுக்கீடு செய்து  உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு-2021-2022, நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அறிவிப்பு மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானிய கோரிக்கை எண்.34 (2021-2022 மற்றும் 2022 - 2023) ஆகியவற்றில் தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர்த் திட்டம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய  பாதாள சாக்கடைத் திட்டம், பசுமை வெளிகள், பூங்காக்கள் அமைத்தல் மற்றும் நீர் நிலைகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள சட்டப்பேரவையில் அறிவிப்புகள்  வெளியிடப்பட்டுள்ளன.

 தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானிய கோரிக்கையினை தொடர்ந்து அம்பாசமுத்திரம் நகராட்சியின் குடிநீர்த் திட்டம், சிதம்பரம் நகராட்சியின் குடிநீர்த் திட்டம், துறையூர்  நகராட்சியின் குடிநீர்த் திட்டம், ஓசூர் மாநகராட்சியின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன் கூடிய பாதாள சாக்கடைத் திட்டம், தூத்துக்குடி மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் திருவேற்காடு, வந்தவாசி, ஜோலார்பேட்டை, வேதாரண்யம், அறந்தாங்கி உள்ளிட்ட  நகரங்களில் 72 பசுமைவெளிகள் மற்றும் பூங்காக்களை அமைத்தல் மற்றும் குன்றத்தூர், வடலூர், இராஜபாளையம், முசிறி, இராமேஸ்வரம் உள்ளிட்ட நகரங்களில் 54 நீர்நிலைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்கு  விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, அம்பாசமுத்திரம் குடிநீர்த் திட்டம் ரூ.36.60 கோடி திட்ட மதிப்பீட்டிலும், சிதம்பரம் குடிநீர்த் திட்டம் ரூ.143.19 கோடி திட்ட மதிப்பீட்டிலும், துறையூர் குடிநீர்த் திட்டம்  ரூ.108.90 கோடி திட்ட மதிப்பீட்டிலும்,  ஓசூர் மாநகராட்சியில் இரண்டு கழிவு நீர் சுத்திகிரிப்பு நிலையங்களுடன் கூடிய பாதாளச்சாக்கடை திட்டம்  ரூ.574.96  கோடி திட்ட மதிப்பீட்டிலும் தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடைத்திட்டம் ரூ.152.14 கோடி திட்ட மதிப்பீட்டிலும், திருவேற்காடு, வந்தவாசி, ஜோலார்பேட்டை, வேதாரண்யம், அறந்தாங்கி உள்ளிட்ட
நகரங்களில் 72 பசுமை வெளிகள் மற்றும் பூங்காக்கள் அமைப்பதற்கு ரூ.27.80 கோடி மதிப்பீட்டிலும், குன்றத்தூர், வடலூர், இராஜபாளையம், முசிறி, இராமேஸ்வரம் உள்ளிட்ட நகரங்களில் 54 நீர் நிலைகளை மேம்படுத்துவதற்கான பணிகள் ரூ.39.59 கோடி மதிப்பீட்டிலும் ஒட்டு மொத்தமாக ரூ.1083.18 கோடியில் ஒன்றிய அரசு மானியமாக ரூ.361.68 கோடியும்,  மாநில  அரசு மானியமாக ரூ.294.60 கோடியும் உள்ளாட்சிகளின் பங்களிப்பாக ரூ.426.90 கோடியும் உள்ளடக்கி நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 131 பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-senthilbalaji-8

    சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

  • athisayangal

    நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

  • perunad

    பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

  • turkeydeath11

    துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

  • lantern-festival-china

    உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்