சென்னை உயர்நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன்?.. ஒன்றிய தொல்லியல் துறைக்கு ஐகோர்ட் கண்டனம்..!
2023-01-25@ 21:57:19

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன் என ஒன்றிய தொல்லியல்துறைக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த 2021 ஆண்டு நவம்பர் 28ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய தொல்லியல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அர்த்தநாரீஸ்வரர்கோயில் பழமையானது என்பதால்தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்; தனது கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை முறையாக பராமரிக்காதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன்? 10 ஆண்டுகளாகியும் சென்னை கன்னிமாரா நூலகத்தின் சீரமைப்பு பணிகள் முடிக்கப்படவில்லை.
உயர்நீதிமன்ற கட்டடம் முறையாக பராமரிக்கப்படுகிறதா என நினைவூட்டியும் கவனம் செலுத்தவில்லை என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்; எத்தனை பணியாளர்கள் உள்ளார்கள், பணிகளை முடிக்க எவ்வளவு கால அவகாசம் எடுத்துக் கொள்வீர்கள்? ஒன்றிய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள், புராதன சின்னங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. புராதன சின்னங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்துள்ளதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஒன்றிய தொல்லியல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜன. 30-ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்தது.
மேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி தீவிரம்..!!
இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் 37,000 வாகனங்களில் இருந்த முறையற்ற வாகன பதிவு எண்கள் சரி செய்யப்பட்டன: போக்குவரத்து காவல்துறை தகவல்
ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாநில அளவிலான வனத்தீ மேலாண்மை குறித்த கருத்துப் பட்டறை
அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் விளக்கு பகுதி காவலர் குடியிருப்புக்கு ஆபத்து?.. சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!