உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் போர் டாங்கிகள் எரிக்கப்படும்: ரஷ்யா எச்சரிக்கை..!
2023-01-25@ 21:44:18

மாஸ்கோ: உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் போர் டாங்கிகள் எரிக்கப்படும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24ந் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யாவை எதிர்த்து போரிட அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, துருக்கி போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இதனிடையே ஆப்ராம்ஸ் போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய ரஷ்ய அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்; அமெரிக்கா உக்ரைனுக்கு ஆப்ராம்ஸ் போர் டாங்கிகள் வழங்குவது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவை பணத்தை வீணடிக்கும் செயல் என்றும், மற்ற ஆயுதங்களை போலவே இந்த டாங்கிகளும் எரியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
பெரு நாட்டில் பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அரசு வலியுறுத்தல்
பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வழக்கு: இலங்கை மாஜி அதிபரிடம் போலீஸ் விசாரணை
தோண்ட தோண்ட சடலங்கள்!: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,200ஐ தாண்டியது..!!
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அமெரிக்காவில் தெலங்கானா மாணவர் பலி
இடிபாடுகளில் கிடைத்த பொருட்களை கொண்டு விளையாடும் சிறுவர்கள்: குடும்பம், வீட்டை இழந்து தெருவில் நிற்கும் துருக்கி மக்கள்
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியது: துருக்கியில் 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனம்..!!
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!