தேசிய நீர் மின்சார நிறுவனத்தில் 401 பயிற்சி இன்ஜினியர்கள்
2023-01-25@ 17:53:04

ஒன்றிய அரசின் மினிரத்னா நிறுவனங்களில் ஒன்றான தேசிய நீர் மின்சார நிறுவனத்தால் நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள 22 நீர் மின்சார நிறுவனங்களில் பணியாற்ற 401 பயிற்சி இன்ஜினியர்கள் தேவைப்படுகின்றனர்.
பணியிடங்கள் விவரம்:
1. Trainee Engineer (Civil): 136 இடங்கள் (பொது-57, எஸ்சி-20, எஸ்டி-10, ஒபிசி-36, பொருளாதார பிற்பட்டோர்-13) தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி.
2. Trainee Engineer (Mechanical): 108 இடங்கள் (பொது-45, பொருளாதார பிற்பட்டோர்- 10, ஒபிசி-29, எஸ்சி-16, எஸ்டி-8). தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி.
3. Trainee Engineer (Electrical): 41 இடங்கள் (பொது-20, எஸ்சி-5, எஸ்டி-3, ஒபிசி-10, பொருளாதார பிற்பட்டோர்-3) தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., தேர்ச்சி.
4. Trainee Officer (Finance): 99 இடங்கள். (பொது-41, ஒபிசி-28, எஸ்சி-12, எஸ்டி-9, பொருளாதார பிற்பட்டோர்-9). தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ அல்லது சிஎம்ஏ தேர்ச்சி.
5. Trainee Officer (HR): 14 இடங்கள். (எஸ்சி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1, பொது-10). தகுதி: மனிதவளம்/ பெர்சனல் மேனேஜ்மென்ட்/ இன்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டம்.
6. Trainee Officer (Law): 3 இடங்கள் (பொது). தகுதி: குறைந்தது 60% மதிப்பெண்களுடன் பிஎஸ்/எல்எல்பி. CLAT -2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனைத்து பணிகளுக்கும் வயது : 30க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆ்ணடுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.50,000- 1,60,000.
பயிற்சி இன்ஜினியர் பணிக்கு கேட்-2022 மதிப்பெண் மற்றும் டிரெய்னி ஆபீசர் பணிக்கு கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.295/ இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
www.nhpcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.1.2023.
மேலும் செய்திகள்
இந்தியன் ஆயில் கழகத்தில் எக்சிக்யூட்டிவ்ஸ் : பி.இ. படித்தவர்களுக்கு வாய்ப்பு
எல்லை பாதுகாப்பு படையில் 1284 இடங்கள்
வருமான வரித்துறையில் 71 இடங்கள் : விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு
தமிழ்நாடு பொதுப் பணித்துறையில் 500 அப்ரன்டிஸ்கள் : பி.இ., டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஏர்-இந்தியாவில் 370 இடங்கள் :ஐடிஐ/ டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு
ஒன்றிய அரசின் அமலாக்கப்பிரிவு, வருங்கால வைப்பு நிதி பிரிவுகளில் 577 இடங்கள்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!