வந்தவாசி அரசு மருத்துவமனையில் 6 மாத கைக்குழந்தை உயிரிழப்பு: மருத்துவர்கள் சிகிச்சையளிக்காமல் அலட்சியமாக இருந்ததாக உறவினர்கள் புகார்
2023-01-25@ 11:26:01

திருவண்ணாமலை: வந்தவாசி அரசு மருத்துவமனையில் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் 6 மாத கைக்குழந்தை இறந்ததாக புகார் தெரிவித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். வந்தவாசியை சேர்ந்த இப்ராகிம் , சபீனா தம்பதியின் 6 மாத ஆண் குழந்தை முகமது அசுல் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை 6 மணிக்கு குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகி உள்ளது. இதனை பெற்றோர் எடுத்து கூறியும் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் செல் போனில் மூழ்கியபடி அலட்சியமாக இருந்ததால் சிறுது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்து விட்டான்.
இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து 6 மணி நேரம் தர்ணா போராட்ட ம் நடத்தினர். இதனை தொடர்ந்து திடிரென்று சாலை மறியலிலும் ஈடுப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஏழுமலை வந்தவாசி வட்டாட்சியர் முருகானந்தம் உள்பட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உறவினர்கள் சமாதானம் அடையவில்லை . இதனால், அரசு மருத்துவமனை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
காமெடி நடிகர் கோவை குணா மறைவு
பல்லாவரம் நகராட்சி வழக்கு தொடர்பாக ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு விசைத்தறி முதலாளிகளுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்தை
பூந்தமல்லியில் உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு
தடை செய்யப்பட்டவைகளுக்கு பதிலாக மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகள்: மாவட்ட கலெக்டர் தகவல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!