வடசென்னையில் விளையாட்டு வளாகம் அமைக்க ரூ.9.70 கோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
2023-01-25@ 00:11:17

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து, தண்டையார்பேட்டை மண்டலம், பகுதி-10, வார்டு 41க்குட்பட்ட சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படவும், அதில் ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம், பெண்களுக்கான உள்ளரங்க உடற்பயிற்சிக் கூடம், ஓடுதளம், சறுக்கு விளையாட்டிற்கான தளம், குழந்தைகளுக்கான விளையாட்டுக் கூடம் மற்றும் விளையாட்டு கருவிகள், கூடைப்பந்து, கையுந்துப் பந்து, இறகுப்பந்து, வளையப்பந்து, கிரிக்கெட் வலைப்பயிற்சி, கபடி, குத்துச்சண்டை, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகளுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படவும், செயற்கை நீரூற்று, பார்வையாளர் மாடம், சாதாரண மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், மின்வசதி, குடிதண்ணீர் வசதி, சூரிய ஒளி தகடுகள் பொருத்துதல் மற்றும் இதர வசதிகள் செய்யப்படவும் சென்னை மாநகராட்சியால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.9.70 கோடி மதிப்பீட்டில் சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய ஒரு விளையாட்டு வளாகம் அமைக்க நிர்வாக அனுமதியும், இதற்கான செலவினம் ரூ.9.70 கோடியை மானியமாக வழங்கியும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த விளையாட்டு வளாகம் அமைப்பதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Tags:
North Chennai Sports Complex Rs 9.70 crore Chief Minister M.K.Stalin வடசென்னை விளையாட்டு வளாகம் ரூ.9.70 கோடி முதல்வர் மு.க.ஸ்டாலின்மேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி தீவிரம்..!!
இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் 37,000 வாகனங்களில் இருந்த முறையற்ற வாகன பதிவு எண்கள் சரி செய்யப்பட்டன: போக்குவரத்து காவல்துறை தகவல்
ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாநில அளவிலான வனத்தீ மேலாண்மை குறித்த கருத்துப் பட்டறை
அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் விளக்கு பகுதி காவலர் குடியிருப்புக்கு ஆபத்து?.. சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!