தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய மோடி பாசறை நிர்வாகி கைது
2023-01-24@ 00:43:57

கோபி: கோபி அருகே குடும்ப தகராறில் மனைவி மற்றும் உறவினர்களை பழி வாங்க தன் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய மோடி பாசறை நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட கணபதிபாளையம் மாணுவக்காடு போயர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (43). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு அய்யம்மாள் (39) என்ற மனைவியும், விக்னேஷ் (15), அடல் பிகாரி வாஜ்பாய் (13), ராஜேஸ் (10) என்ற மகன்களும் உள்ளனர். சண்முகம் தேவேந்திர குல வேளாளர் மோடி பாசறையின் கோபி சட்டமன்ற தொகுதி நிர்வாகியாக உள்ளார். 2 நாட்களுக்கு முன் சண்முகத்திற்கும் மனைவி அய்யம்மாளுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கோபியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு 2 மகன்களுடன் அய்யம்மாள் சென்றார். . நேற்று அதிகாலை தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சண்முகம் கோபி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், மனைவி மற்றும் அவரது உறவினர்களை வழக்கில் சிக்க வைக்கலாம் என நினைத்து சண்முகமே தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:
Petrol bomb at his house Modi Pasara administrator arrested தனது வீட்டில் பெட்ரோல் குண்டு மோடி பாசறை நிர்வாகி கைதுமேலும் செய்திகள்
பட்டாசு அணுகுண்டை வெடிக்க வைத்த நான்கு பேர் கைது: மதுரவாயலில் பரபரப்பு
மது போதையில் கத்தியால் அண்ணியை தாக்கிய மைத்துனர் கைது
விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்த ஆத்திரம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக புகார் செய்த மனைவிக்கு சரமாரி அடி-உதை: கணவரிடம் போலீசார் விசாரணை
ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
கஞ்சா விற்ற வாலிபர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் செயின் பறிப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!