ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்குவது, மறுப்பது காவல்துறையின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது
2022-12-10@ 01:07:06

சென்னை: ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்குவதும் மறுப்பதும் காவல்துறையினுடைய தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் கோவை காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வால்பாறை திராவிட தோட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் எஸ்.கல்யாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தொழிலாளர்களின் கூலி உயர்வை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதால் வால்பாறையிலிருந்து கோவை வரை ஊர்வலமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வால்பாறை காவல் நிலையத்தில் மனு கொடுத்தேன். மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக காவல்துறை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை, அமல்படுத்தாதஅதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், தற்போது கோவையில் ஊர்வலம் நடத்த தகுந்த சூழல் இல்லை என விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஊர்வலங்களுக்கு அனுமதி அளிப்பது காவல்துறையினுடைய தனிப்பட்ட அதிகாரம் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு: பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டி
இன்று கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் மறியல்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு
பிரபல இயக்குனர், நடிகர் டி.பி.கஜேந்திரன் திடீர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: இன்று மாலையில் உடல் தகனம்
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!