பொது சிவில் சட்ட தனிநபர் மசோதா: பாஜ எம்பி தாக்கல்
2022-12-10@ 00:53:26

புதுடெல்லி: பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவை பா.ஜ எம்பி கிரோடி லால் மீனா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்தார். மக்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ,‘‘ கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள்,நீதித்துறை அதிகாரிகளை தேர்வு செய்வதற்கு அகில இந்திய நீதித்துறை சேவை கொண்டுவர வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது. இதில் தொடர்புடையவர்கள் இடையே வேறுபட்ட கருத்துகள் உள்ளது. தற்போது இதை கொண்டுவருவதற்கான திட்டம் இல்லை’’ என்றார்.
பொது சிவில் சட்டம்: பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு பாஜ எம்பி தனிநபர் மசோதாவை அறிமுகப்படுத்தினார். இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
புற்றுநோய் அதிகரிப்பு: மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, ‘‘கடந்த 2020ல் நாட்டில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 13,92,179. இது 12.8 சதவீதமாக அதிகரிக்கும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் புற்றுநோய் நிதி திட்டத்தின் கீழ் 2022-23 நிதியாண்டில் 40 பேருக்கு சிகிச்சை அளிக்க ரூ.2 கோடியே 16 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
50 தனிநபர் மசோதா: தேர்தலில் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்கு சீட்டு முறை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட 50 தனிநபர் மசோதாக்கள் நேற்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஆன்லைன் பரிசோதனையின் போது பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ்: வாலிபர் கைது
பெண் சீடர் பலாத்காரம் சாமியார் ஆசாராம்பாபுவுக்கு ஆயுள்தண்டனை: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு
காவிரியின் குறுக்கே தண்ணீர் எடுக்க கர்நாடகா அரசுக்கு தடை விதிக்க வேண்டும்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு
ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன்
மோடிக்கு யார் அதிக விசுவாசம்? கவர்னர்களிடையே போட்டி: காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
கொல்கத்தாவில் 9 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!