இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக மருத்துவ மாணவர்கள் பயில்கின்றனர்: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
2022-12-10@ 00:05:29

கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனையில் ரூ2.5 கோடியில் புனரமைக்கப்பட்ட கட்டிடம் உள்பட கோவை மாவட்டம் முழுவதும் ரூ.8.78 கோடி செலவில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் மற்றும் அதிநவீன மருத்துவ உபகரணங்களை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், செந்தில்பாலாஜி ஆகியோர் நேற்று திறந்து வைத்து பேசுகையில், கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் 150 மாணவர்கள் படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மாணவரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஒன்றிய அரசிடம் தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி தற்போது 200 மாணவர்கள் பயில அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், 1,550 புதிய இடங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான், அதிகளவில் ஆண்டுதோறும், அதிக மருத்துவ மாணவர்கள் பயில்கின்றனர். டெல்லியில் மக்கள் நெருக்கடியான இடத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்த மருத்துவமனை ஒன்றை பார்த்த தமிழக முதல்வர், அதேபோல் 709 நகர்ப்புற நல மையங்கள் கட்டவும் நிதி ஒதுக்கியுள்ளார் என்றார்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!