கிருஷ்ணகிரி அருகே பைனான்சியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
2022-12-09@ 16:36:57

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 3வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் வாஞ்சி என்கிற சதீஷ்(40). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மேலும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாவட்ட துணை தலைவராக உள்ளார். நேற்றிரவு வீட்டில் சதீஷின் மனைவி ராதா, மாமியார் லட்சுமி, மகள் கவி ஆகியோர் இருந்தனர்.
அப்போது இரவு 10மணியளவில் 7பேர் கொண்ட கும்பல் சதீஷின் வீட்டிற்கு முன் வந்தனர். அவர்கள் திடீரென சத்தம்போட்டபடி சதீஷின் வீட்டை நோக்கி பெட்ரோல் குண்டு வீசினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஷின் குடும்பத்தினர் உடனடியாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. கேட்டின் அருகே 10க்கும் மேற்பட்ட பெட்ரோல்பாட்டில்கள் சிதறி கிடந்தது.
தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சதீஷ் மீது பலவழக்குகள் உள்ளது. போலீசார் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகள்
பாடியநல்லூர் சோதனை சாவடி, காஞ்சியில் ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்திய 17.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூன்று பேர் கைது; உரிமையாளருக்கு போலீஸ் வலை
சென்னை அண்ணாசாலையில் சுவர் இடிந்து பெண் பலி மேலும் ஒருவர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது
பார்ட்டிக்கு அழைத்து சென்று மதுவை ஊற்றிக் கொடுத்து 13 வயது சிறுமி பலாத்காரம்: நண்பர்கள் இருவர் கைது
விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்
போலி நகைகளை அடகு வைத்து ரூ.1.84 லட்சம் அபேஸ் செய்தவர் கைது: முக்கிய குற்றவாளிக்கு வலை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!