திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்து சென்று காதலியை கொன்று உப்பை தூவி புதைத்த காதலன்
2022-12-09@ 16:05:32

லூதியானா: திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்து சென்று காதலியை கொன்று உப்பை தூவி புதைத்த காதலன் உட்பட 4 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் ரசூல்பூர் கிராமத்திதை சேர்ந்தவர் ஐஸ்பிரீத் கவுர் (24). இவரும் அதேபகுதியை சேர்ந்த பரம்ப்ரீத் சிங் (21) என்பவரும் காதலித்து வந்தனர்.
கடந்த நவம்பர் 24ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதையடுத்து தனது காதலனை நம்பி ஐஸ்பிரீத் கவுர் வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டில் இருந்த 12 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பரம்ப்ரீத் சிங்கின் வீட்டுக்கு வந்தார். இருவரும் காரில் புறப்பட்டு சென்றனர். அப்போது வழியில், மற்றொரு நண்பரை காரில் ஏற்றிக் கொண்டனர்.
ஆனால் திடீர் திருப்பமாக ஜஸ்பிரீத் கவுரை கழுத்தை நெரித்து இருவரும் சேர்ந்து கொன்றனர். அவரது உடலை அப்பகுதியில் இருந்த கால்வாயில் வீசினர்; ஆனால் கால்வாயில் போதுமான தண்ணீர் இல்லாததால், அன்றிரவு உடலை எடுத்துக் கொண்டு தங்களது பண்ணை வீட்டுக்கு சென்றனர். அங்கு ஐஸ்பிரீத் கவுரின் உடல் மீது உப்பை தூவிவிட்டு குழிதோண்டி புதைத்தனர். பின்னர் அங்கு அமர்ந்து மது அருந்திவிட்டு தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.
இதற்கிடையே தங்களது மகளை காணவில்லை என்று ஐஸ்பிரீத் கவுரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்திய நிலையில், பரம்ப்ரீத் சிங்குக்கும் ஐஸ்பிரீத் கவுருக்கும் காதல் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. அதையடுத்து பரம்ப்ரீத் சிங்கை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட காதலன் பரம்ப்ரீத் சிங் மற்றும் 3 பேர் சேர்ந்து ஐஸ்பிரீத் கவுரை கொன்றுள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஐஸ்பிரீத் கவுர், தனது காதலனுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளார். அதனால் அவரை கொன்றுவிட பரம்ப்ரீத் சிங் முடிவு செய்தார்.
அதற்காக திருமணம் செய்து கொள்வதாக கூறி, அவரை வீட்டில் இருந்து வருமாறு அழைப்பு விடுத்தார். அவரது பேச்சை நம்பி வீட்டை விட்டு வெளியே வந்த ஐஸ்பிரீத் கவுரை, காரில் அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொன்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பரம்ப்ரீத் சிங் உட்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
மேலும் செய்திகள்
மக்கள் நம்பிக்கையை பெற்றதாக பிரதமர் மோடி எப்படி கூறுகிறார்?.. இடஒதுக்கீட்டை குறைத்துவிட்டு பாதுகாவலர் என்பதா?: மாநிலங்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா விளாசல்..!!
ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி; உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு..!!
ஆள் குறைப்பு நடவடிக்கையால் பேஸ்புக் பதிவிடுவதில் சிக்கல்: 12 ஆயிரம் பேர் புகார்
பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உருவாக்கும் ரசாயனம் கலப்பு: நிறுவனத்தை மூடி சீல் வைத்த அதிகாரிகள்
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் 12ம் தேதி நடை திறப்பு: ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது
துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பம் வடிவமைப்பு: சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!