ஸ்ரீரங்கத்தில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை-பரபரப்பு கடிதம் சிக்கியது?
2022-12-09@ 14:44:24

திருச்சி : திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் உள்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சி திருவானைக்கோவில் நடுகொண்டையம் பேட்டை அகிலா நகர் பகுதியில் சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). அதே பகுதியை சேர்ந்த வேற்று சமூகத்தை சேர்ந்தவர் வசந்த பிரியா (30). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தம்பதியின் மகன் சாமிநாதன்(8). கார்த்திகேயன் வெளிநாட்டில் பணியாற்றி வந்துள்ளாராம்.
கடந்த 2 நாட்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து திருச்சிக்கு திரும்பியுள்ளார். தொடர்ந்து, தனது மனைவி வசந்த பிரியா குறித்து ‘பல்வேறு தகவல்கள்’ கார்த்திகேயனுக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திக்கேயன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. முக்கியமாக, வெளிநாட்டில் இருந்து வந்த அவர் வெளியே செல்லாமல் இருந்தாராம்.
இந்நிலையில், நேற்றிரவு 8.30 மணியளவில் கார்த்திகேயனின் பூட்டி இருந்தது. அவரை பார்க்க சென்ற உறவினர்கள் கதவை தட்டியும் கதவு திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது, கார்த்திகேயன், மகன் சாமிநாதன் மற்றும் கார்த்திகேயனின் தாய் வசந்தா (68) ஆகிய மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு கிடப்பது தெரியவந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில்,‘‘ கார்த்திகேயன் வெளிநாட்டில் இருந்த போது குடும்பத்தில் ஏற்பட்ட ‘சிக்கலான பிரச்னை’ என்று தெரியவந்துள்ளது. கார்த்திக்கேயன், மகன் சாமிநாதன் மற்றும் கார்த்திகேயனின் தாய் வசந்தா ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் வசந்த பிரியா வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.
முக்கியமாக, தற்கொலைக்கான காரணம் குறித்து கார்த்திக்கேயன் பரபரப்பு கடிதம் எழுதி வைத்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. திருச்சியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா
தண்ணீர் வரத்து குறைந்ததால் கவியருவி மூடப்பட்டது
கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது; களக்காடு பகுதியில் 20 வகையான நீர் பறவைகள்
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தனர்
தாளவாடி மலைப் பகுதியில் மின் கம்பத்தை சேதப்படுத்திய காட்டு யானை: சிசிடிவி வீடியோ பரபரப்பு காட்சி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!