தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு 6,000 வகுப்பறைகள் கட்ட ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
2022-12-09@ 00:15:03

சென்னை: தமிழக அரசு முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அரசாணை: தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்தபடி ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 6 ஆயிரம் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் பேரில் ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் ரூ.800 கோடி மதிப்பில் கட்டப்பட வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதினார்.
அதில், இடிக்கப்பட்ட பள்ளிகளில் ஒரு வகுப்பறை கூட இல்லாத 415 பள்ளிகளில் 985 வகுப்பறைகள் கட்ட ரூ.138 கோடி, பள்ளிக் கட்டிடம் முழுவதும் இடிக்கப்பட்ட 558 இடங்களில் 1155 வகுப்பறைகள் கட்ட ரூ.162 கோடி, 8 வகுப்பறைகளுக்கு மேல் உள்ள பள்ளிகளில் அதிகப்படியான மாணவர்கள் இருக்கும் 67 பள்ளிகளில் 638 வகுப்பறைகள் கட்ட ரூ.89 கோடியே 50 லட்சம், பள்ளிகளில் 2 முதல் 7 கூடுதல் வகுப்பறைகள் என 609 பள்ளிகளில் 2875 வகுப்பறைகள் ரூ.402 கோடியே 50 லட்சம் செலவிலும், இதர செலவுகளுக்காக ரூ.8 லட்சம் என மொத்தம் ரூ.800 கோடிக்கு செயல்திட்டம் வகுத்து அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தார். மேற்கண்ட ஆணையரின் திட்டத்தை கவனமுடன் பரிசீலித்த அரசு அதை ஏற்றுக் கொண்டு ரூ. 800 கோடியில் 6 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட அனுமதி அளித்து உத்தரவிடுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் முதன்மைச் செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார்.
Tags:
Primary schools middle school 6 000 classrooms finance Ordinance தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளி 6 000 வகுப்பறைகள் நிதி அரசாணைமேலும் செய்திகள்
கடுங்குளிர்,பயணிகள் குறைவால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து
சென்னையில் வரும் 31ம் தேதி தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்
ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான தேதி மாற்றம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
பழனி முருகன் கோயில் குடமுழுக்கை தொடர்ந்து ஆகம விதிப்படியே மண்டல பூஜை நடைபெறுவதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்
வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று சான்று பெறும் திரைப்படங்களை மைனர்கள் பார்க்க அனுமதிப்பதை எதிர்த்து வழக்கு: தணிக்கைதுறை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் வரும் 31-ம் தேதி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!