SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்ன சொல்கிறது முடிவுகள்?

2022-12-09@ 00:14:06

திக்கெட்டும் திசை எங்கும் மோடி, மோடி என்ற குரல் எதிரொலித்து இருக்கிறது குஜராத் சட்டசபை தேர்தலில். அதனால் தான் எப்போதும் இல்லாத அளவுக்கு வரலாற்று வெற்றியை அங்கு பா.ஜ பெற்று இருக்கிறது. ஆனால் இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. டெல்லி மாநகராட்சியில் 15 ஆண்டுகளாக பதவியில் இருந்த பா.ஜவை அகற்றிவிட்டு ஆம்ஆத்மி வெற்றியை பெற்று இருக்கிறது. எப்படி எடுத்துக்கொள்வது இந்த தேர்தல் முடிவுகளை?.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் குஜராத். அங்கு மோடி மீது மக்களுக்கு பாசம் அதிகம்.

தொடர்ந்து 13 ஆண்டுகள் அவர் அங்கு முதல்வர் பதவியில் இருந்திருக்கிறார். அதன்பின் இப்போது தொடர்ந்து 8 ஆண்டுகள் பிரதமராக இருக்கிறார். இன்றைய குஜராத்தில் வேலைவாய்ப்பின்மை, கள்ளச்சாராய பலிகள், மோர்பி பால விபத்து, மின்சார தட்டுப்பாடு, மின் கட்டணம் உயர்வு, இன்னும் குடிநீர்பிரச்னை கூட பல இடங்களில் இருந்தாலும் அத்தனையும் மறக்கடிக்கக்கூடிய ஒரே சக்தி மோடி  என்ற பெயராக இருந்தது. திடீரென குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி எடுத்த வேகம், பா.ஜவுக்கு பயத்தை ஏற்படுத்தி விட்டது.

அதனால் இமாச்சல பிரதேசத்திற்கு தனியாக தேர்தல் நடத்தப்பட்டது. 8 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்ட டெல்லி மாநகராட்சிக்கு திடீரென டிச.4ம் தேதி தேர்தல் என்று அறிவித்து ஆம் ஆத்மியின் கவனம் திசை திருப்பப்பட்டது. இறுதியில் ஒன்றரை மாதங்களாக மோடி, அமித்ஷா மற்றும் பா.ஜ தலைவர்கள் குஜராத்தையே வலம் வந்து இந்த வரலாற்று சாதனை வெற்றியை பெற்று இருக்கிறார்கள். அதிலும் 13 சதவீதம் ஓட்டுகள் ஆம்ஆத்மி பெற்று இருக்கிறது. இந்த ஓட்டு பிளவு காங்கிரசின் படுவீழ்ச்சிக்கும், பா.ஜவின் பிரமாண்ட வெற்றிக்கும் வழிவகுத்து இருக்கிறது.

இன்னொரு பக்கம் அசுர பலத்தில் பா.ஜ வசம் இருந்த இமாச்சலபிரதேசத்தை கைப்பற்றி இருக்கிறது காங்கிரஸ். பிரியங்கா காந்தி அங்கு வீதிவீதியாக வலம் வந்து பிரசாரம் செய்ததற்கு பலன் கிடைத்து இருக்கிறது என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை தக்கவைக்க பா.ஜ மேற்கொண்ட முயற்சி படுதோல்வியில் முடிந்து இருக்கிறது. அதே போல் தான் டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகளும் எதிரொலிக்கின்றன. பண பலம், அதிகார பலம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஒன்றிய அரசு எந்திரமும் அங்கு ஆம்ஆத்மிக்கு எதிராக களம் இறங்கி பணியாற்றிய போதும், தொடர்ந்து 15 ஆண்டுகள் பெற்ற வெற்றியை ஆம்ஆத்மியிடம் பறிகொடுத்து இருக்கிறது பா.ஜ.

தேர்தலில் பா.ஜ வலுவான சக்தி. எந்த ஒரு மாநிலம் என்றாலும், ஆர்எஸ்எஸ் மற்றும் தொண்டர் படை உதவியுடன் அதிதீவிரமாக பணியாற்றுவது பா.ஜவின் சிறப்பு. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு வெற்றி வியூகம். குஜராத்தில் பெற்ற அமோக வெற்றியே அதற்கு சான்று. அப்படிப்பட்ட பா.ஜவை இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும், டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மியும் வீழ்த்தி இருக்கிறது என்றால் ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநில மக்களின் நம்பிக்கையை அரசியல் கட்சிகள் வலுவாக பெற்றால், வெற்றி எளிது என்பதுதான் இந்த தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

 • new-parliament-pic-20

  பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

 • cong-ravi-19

  தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்