சபரிமலையில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்: இன்று தரிசனத்துக்கு 1 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு
2022-12-09@ 00:04:32

திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனத்துக்காக நேற்று அதிகாலையே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து இன்றும், வரும் 12ம் தேதியும் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்காக முன்பதிவு செய்து உள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளன. கடந்த மாதம் 16ம் தேதி மாலை நடை திறந்தது முதல் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் மண்டல பூஜை நெருங்கி வருகிறது. ஆகவே பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்து உள்ளது. நேற்று 96 ஆயிரத்திற்கு அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன் பதிவு செய்திருந்தனர்.
இதில் 94 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று (9ம் தேதி) தரிசனத்திற்காக 1 லட்சத்து 5 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த மண்டல சீசனில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும். இதே போல் வரும் 12ம் தேதியும் இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். கிறிஸ்துமஸ் விடுமுறை நெருங்கி வருவதால் வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நேற்று அதிகாலை 3 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மேலும் செய்திகள்
அக்னி வீரர் பணியிடங்கள் முதலில் நுழைவு தேர்வு: ராணுவம் அறிவிப்பு
குழந்தை திருமணங்களுக்கு எதிராக தொடர் போராட்டம்; அசாம் அரசு நடவடிக்கை சிறுமிகளின் நிலை என்ன?.. ஓவைசி கேள்வி
பைக் மீது லாரி மோதியதில் சிறுவன் பலி எதிரொலி: 22 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மாஜி இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது மனைவி பரபரப்பு புகார்
உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேஷன் ஷோ: பார்வையாளர்கள் வரவேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!