ஈராக்கில் பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்கள் மோதல்; 2 பேர் பலி
2022-12-08@ 16:35:24

ஈராக்: ஈராக்கில் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈராக் பிரதமராக முகமது அல்-சூடானி இருந்து வருகிறார். இவர் நியமிக்கப்பட்டதில் இருந்து அங்கு அவ்வப்போது போராட்டம் நடந்து வருகிறது. ஈரான் தெற்கு நகரமான நசிரியாவில் அரக்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர்.
இதனால் பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 11 பேர் காயமடைந்தனர். இதனால் பெரும் கலவரமாக மாறியது. அதனால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி, போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கூகுள் நிறுவனம் உருவாக்கிய பார்டு ஏ.ஐ. சாட்பாட் தவறான பதில்: ஆல்பபெட்டின் சந்தை மதிப்பு 9% சரிவு.. ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு..!!
பூகம்ப பூமியில் இந்தியாவின் ’ஆபரேஷன் தோஸ்த்' மீட்புப் பணி... தற்காலிக மருத்துவமனை அமைத்து வீரர்கள் மக்களுக்கு உதவிக்கரம்!!
துருக்கியை புரட்டி போட்ட நிலநடுக்கம்: 62 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட பெண்..!!
செலவினங்களை குறைக்க 7,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் வால்ட் டிஸ்னி நிறுவனம்!!
துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது!..
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.68 கோடியாக அதிகரிப்பு
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!