'தன்னை கேட்காமலேயே அதிமுக நிர்வாகியாக ஓபிஎஸ் அறிவித்துவிட்டார்': ஈரோட்டை சேர்ந்த பழனிசாமி ஆதரவாளர் பரபரப்பு குற்றச்சாட்டு
2022-12-08@ 15:44:58

ஈரோடு: தன்னை கேட்காமலேயே ஓ.பி.எஸ் தலைமையிலான அதிமுக நிர்வாகியாக அறிவித்துவிட்டதாக ஈரோட்டை சேர்ந்த பழனிசாமி ஆதரவாளர் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இதனிடையே, அதிமுக பன்னீர்செல்வம் அணியின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளராக உள்ள ஜெயராமனை வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளராக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயராமன், தான் இன்னும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இருப்பதாகவும், தன்னை கேட்காமலேயே பன்னீர்செல்வம் நிர்வாகியாக அறிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் அனுப்ப உள்ளதாக ஜெயராமன் கூறியுள்ளார். மொத்தத்தில் இந்த விவகாரம் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை: முதல்வருக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையாருக்கு பக்தர்கள் வெள்ளத்தில் ரதசப்தமி தீர்த்தவாரி
தேன் கொள்முதலுக்கான விலையை உயர்த்த வழக்கு: காதி வாரியம் பரிசீலிக்க உத்தரவு
நாஞ்சில் சம்பத்திடம் அமைச்சர் நலம் விசாரித்தார்
புதுவையில் 30, 31ம் தேதிகளில் ஜி20 மாநாட்டுக்காக 5 இடங்களில் 144 தடை
தர்மபுரி அருகே அட்டகாசம் யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!