SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழை பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க பேரிடர் மீட்பு படை குழுவினர் திருவள்ளூர் மாவட்டம் வருகை

2022-12-08@ 15:43:06

திருவள்ளூர்: மழை பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க திருவள்ளூர் மாவட்டத்துக்கு பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர். தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு கன மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையொட்டி கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பூந்தமல்லி பெட்டாலியன் 13 தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 40 பேர் கொண்ட குழுவினரை திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்ஸ்பெக்டர் ரவி மேற்பார்வையில், விஷ்ணு, கோகுல், ரவிச்சந்திரன் ஆகியோரின் தலைமையில் 3 குழுவாக பிரிக்கப்பட்டு மாவட்டத்தின் முக்கிய இடங்களுக்கு  கயிறு, ரப்பர் படகு, லைப் ஜாக்கெட், முதலுதவி மருந்து பெட்டகம், ஸ்ட்ரக்ச்சர், ஜெனரேட்டர், விளக்குகள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மழை வெள்ளம் பாதிக்கும் இடங்களில் தங்கி மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கனமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கப்படும்’ என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • orange-tree-wishes-27

    ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

  • pet-fesitival-mumbai

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

  • france-reform

    பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

  • new-parliament-pic-20

    பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

  • cong-ravi-19

    தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்