ஆளுநர் கிடப்பில் போட்டுள்ள சட்ட மசோதாக்களை பட்டியலிட்டு பேனர் வைத்த திமுக எம்பி: புதுகையில் பரபரப்பு
2022-12-08@ 15:24:19

புதுக்கோட்டை: சட்டபேரவையில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சட்ட மசோதாக்களை மக்கள் தெரியும் வகையில் பட்டியலிட்டு திமுக எம்பி அப்துல்லா பேனர் வைத்துள்ளார். இது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு சட்ட மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பபட்டுள்ளது. ஆனால் ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டும் என்றே ஒப்புதல் அளிக்கவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டையில் திமுக எம்பி அப்துல்லா ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சட்ட மசோதாக்களை பட்டியலிட்டு பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பேனர் வைத்துள்ளார். அதில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மற்றும் கால்நடை பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்தவும், விசாரணை செய்வதற்கும் அரசு அதிகாரம் அளிக்கும் வகையில் இரு சட்டத்திருத்த மசோதாக்கள் அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளன.
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை ஐந்தாண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்ட திருத்த மசோதா, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்கும் அதிகாரம், நகர் புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்திருத்தம், ஆன்லைன் ரம்மி தடைசெய்யும் சட்ட மசோதா உள்ளிட்ட 22 சட்ட மசோதா நிலுவையில் உள்ளதாக எம்பி அப்துல்லா வைத்துள்ள பிளக்ஸ்சில் உள்ளது. இந்த பிளக்ஸ் பேனர் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!