பாறையூர் ஏரியில் ஆனந்த குளியல் போட்ட மூன்று யானைகள்
2022-12-08@ 14:48:08

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பாறையூர் ஏரியில் மூன்று காட்டு யானைகள் ஏரி நீரில் குளித்து உற்சாகமாக விளையாடியது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடேதூர்க்கம் வனப்பகுதியில் இருந்து கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இரண்டு ஆண் யானைகள் மற்றும் ஒரு மக்னா யானை என மூன்று காட்டு யானைகள் இடம்பெயர்ந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் சுற்றி வருகிறது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்களை சேதம் செய்தும் வருகின்றது. கடந்த நவம்பர் 14ம் தேதி கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே முகாமிட்ட மூன்று யானைகளை வனத்துறையினர் விரட்டினர். இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலை, பாலகுறி அடுத்த பாறையூர் ஏரியில் குளியல் போட்ட மூன்று யானைகள் ஏரியில் தொடர்ந்து விளையாடி வருகிறது.
இன்று மாலை யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணி துவங்கும் என வனத்துறையினர் கூறினர். அதுவரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் வர வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் செய்திகள்
களஆய்வில் முதலமைச்சர் திட்டம் துவக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வேலூர் பயணம்: வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரத்தில் டிரோன்கள் பறக்க தடை
தேசிய கீதம் ஒலிக்கும்போது செல்போனில் பேசிய சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சவுதி அரேபியா கடலில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குமரி மீனவர் படுகாயம்
மாமல்லபுரத்தில் ஜி 20 மாநாடு எதிரொலி: ஓட்டல்களில் தங்குபவர்களின் விவரங்கள் புகை படங்களுடன் தெரிவிக்க வேண்டும்.! உரிமையாளர்களுக்கு டிஎஸ்பி உத்தரவு
திண்டிவனம் வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு
ஈரோடு இடைத்தேர்தல்; முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஆர்வம் காட்டிய சுயேட்சைகள்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!