SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாண்டஸ் புயலின் வேகம் அதிகரிப்பு!: சென்னையில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. வானிலை மையம் வார்னிங்..!!

2022-12-08@ 14:18:09

சென்னை: சென்னையில் நாளை, நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காரைக்காலுக்கு கிழக்கு - தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. சென்னையில் இருந்து தென் கிழக்கில் 550 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இரவு புயல் கரையை கடக்கும். நாளை இரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

மாண்டஸ் புயல் காரணமாக நாளை தமிழ்நாடு, ஆந்திராவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலையில் 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல் தற்போது 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். தமிழக கடலோர பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில், சில நேரங்களில் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.  நாளை 50 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். டிசம்பர் 10ம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் டிசம்பர் 10ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

25 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு:

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், தென்காசி, விழுப்புரம், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகரில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூரில் மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-dmk-votes-2

    அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

  • scotland-bonfire-festival

    ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்