வண்டலூர் பூங்காவில் யானைகளின் இருப்பிடம் புனரமைப்பு: யானைகள் குளித்து மகிழ பிரத்யேக நீச்சல் குளம்
2022-12-08@ 12:06:38

சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகளுக்கான பிரத்யேக நீச்சல் குளம் திறக்கப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் 21 ஏக்கர் பரப்பளவில் யானைகள் இருப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது ரோகிணி, பிரக்ருதி ஆகிய இரண்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
யானைகள் இருப்பிட கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் பணி தனியார் பங்களிப்புடன் நடைபெற்று வந்தது. யானைகளுக்கான சமையல் செய்ய பிரத்யேக பகுதி, பராமரிப்பாளர்கள் தங்குமிடம், யானைகள் குளிக்க வசதியாக நீச்சல் குளம் ஆகியவை கட்டப்பட்டு வந்தன. இந்த பணிகள் நிறைவுற்றதை அடுத்து பூங்கா இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி அவற்றை திறந்து வைத்தார். நீச்சல் குளத்தை வண்டலூர் பூங்காவில் உள்ள யானைகள் இரண்டும் விளையாடி மகிழ்ந்தனர்.
யானைகளின் இருப்பிடத்தில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு அகழி ஆழ்படுத்தப்பட்டுள்ளது. 2 ஏக்கர் பரப்பளவில் யானைகளுக்கான தீவின தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்கு வந்து இருந்த பார்வையாளர்கள் யானைகளின் இருப்பிடத்தை கண்டு ரசித்தனர்.
மேலும் செய்திகள்
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு: பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டி
இன்று கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் மறியல்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு
பிரபல இயக்குனர், நடிகர் டி.பி.கஜேந்திரன் திடீர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: இன்று மாலையில் உடல் தகனம்
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!