ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஏகாந்த ராமசுவாமி கோயிலில் திருடப்பட்ட நடனக் கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..!!
2022-12-08@ 10:08:39

வாஷிங்டன்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஏகாந்த ராமசுவாமி கோயிலில் திருடப்பட்ட கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இருந்து திருடுபோன பழங்கால சிலைகள் மற்றும் தொன்மையான பொருட்கள் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு, சிலைகளை மீட்கும் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், 1966ல் திருடப்பட்ட நடனக் கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. நடமாடும் கிருஷ்ணர் சிலையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தகவல் தெரிவித்திருக்கிறது.
தங்கச்சிமடம் ஏகாந்த ராமசுவாமி கோயிலில் நடமாடும் கிருஷ்ணர் உள்பட 6 சிலைகள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, 1.நடனக் கிருஷ்ணர், 2.விஷ்ணு, 3.ஸ்ரீதேவி, 4.பூதேவி, 5.பூதேவி மற்றும் 6 விஷ்ணு சிலைகள் திருடப்பட்டன. இதில் நடனக் கிருஷ்ணர் சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழக கோயில்களில் அதாவது, திருத்துறைப்பூண்டி பண்ணாக பரமேஸ்வர சுவாமி கோயிலில் திருடப்பட்ட தேவி, விநாயகர் சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
மேலும் செய்திகள்
நவாஸ் மகள் மரியம் நாடு திரும்பினார்
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
இங்கிலாந்தில் கவுரவம் இந்திய இளவரசிக்கு நீல வில்லை விருது
கறுப்பின வாலிபர் பலி அமெரிக்காவில் மக்கள் போராட்டம்: 5 போலீசார் கைது
நேரடி, மறைமுக வரிகளை எளிமையாக்க வேண்டும்: இந்தியாவுக்கு அமெரிக்கா கோரிக்கை
இஸ்ரேலில் பதற்றம் மதவழிபாட்டு தலத்தில் 7 பேர் சுட்டுக்கொலை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!