கனமழை பெய்தால் தமிழகத்தில் அதிகளவு மருத்துவ முகாம் அமைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
2022-12-08@ 00:07:53

சென்னை: கனமழை பெய்தால் தமிழகம் முழுவதும் அதிகளவு மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவசர மருத்துவம் பட்டமேற்படிப்புக்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று மேற்படிப்புக்கான வகுப்பை தொடங்கி வைத்தார். பின்னர் விஷ முறிவு கையேட்டை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: இந்தியாவிலேயே முதல் முறையாக அவசர மருத்துவ சிகிச்சைக்கான துறை தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது. மருத்துவ பட்ட மேற்படிப்பு எம்.டி அவசர சிகிச்சை மற்றும் தொடர் மருத்துவ கல்வி எனும் புதிய பாட பிரிவு தொடங்கப்பட்டு 85 இடங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநில ஒதுக்கீட்டில் 50 % இடங்கள் நிரப்பப்பட்பட்டு வருகிறது. இதற்காக, உலக வங்கி நிதி உதவியுடன் 100 கோடி மதிப்பீட்டில் கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் இந்த பாடப்பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் முதன்முறையாக துவங்கப்பட்ட இந்த நிகழ்வு நிதி ஆயோக் அமைப்பால் பாராட்டப்பட்டுள்ளது.
1,340 வாகனங்கள் உயிர்காக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. இவற்றில் 300 வாகனங்கள் அதிநவீன கருவிகள் பொருந்திய வாகனங்களாக உள்ளது. எம்.ஆர்.பி. செவிலியர்களை வரன்முறை படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நிதி ஆதரத்துக்கு ஏற்ப பணி நிரந்தரம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவ மழை முடியும் தருவாயில் வந்துள்ளது. குறிப்பிட்ட மாவட்டங்களூககு ரெட் அலர்ட் அளிக்கப்பட்டுள்ளது. பெருமழை பெய்தால் உடனே மருத்துவ முகாம்கள் அமைக்க துறையின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:
Heavy rains in Tamil Nadu Athikalavu Medical Camp Minister M. Subramanian கனமழை தமிழகத்தில் அதிகளவு மருத்துவ முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்மேலும் செய்திகள்
துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: இன்று மாலையில் உடல் தகனம்
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
நெல்கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை: முதல்வர் உத்தரவு
பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!