உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் சானு
2022-12-08@ 00:07:36

புதுடெல்லி: கொலம்பியாவின் போகோடா நகரில் உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரின் மகளிர் 49 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற முன்னாள் உலக சாம்பியன் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 113 கிலோ, ஸ்னாட்ச் முறையில் 87 கிலோ உள்பட மொத்தம் 200 கிலோ தூக்கி 2வது இடம் பிடித்தார். சீன வீராங்கனைகள் ஜியாங் ஹூயிஹூவா மொத்தம் 206 கிலோ தூக்கி தங்கப் பதக்கத்தையும், ஹோ ஜியீ (198 கிலோ) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். மீராபாய் (28 வயது, மணிப்பூர்) ஏற்கனவே 2017ம் ஆண்டு உலக பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். தொடர்ந்து 2020ல் நடந்த ஆசிய பளுதூக்கும் போட்டியில் வெண்கலம், காமன்வெல்த் போட்டிகளில் 2018, 2022ல் தலா ஒரு தங்கம், 2014ல் வெள்ளி வென்றுள்ளார்.
Tags:
Chanu won silver in world weightlifting championship உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் வெள்ளி வென்றார் சானுமேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்...
ரஞ்சி கோப்பை காலிறுதி 93 ரன்னில் சுருண்டது ஆந்திரா: ம.பி.க்கு வெற்றி வாய்ப்பு
3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி.! 6 விக்கெட் கைப்பற்றி அசத்திய ஆர்ச்சர்
மகளிர் டி 20 இறுதி போட்டி; இந்தியா தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
பறந்து வந்த பந்தை பாய்ந்து பிடித்த சூர்யகுமார்
சுப்மன் கில் தில்லான ஆட்டத்தால் நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா; அனைத்து வீரர்களும் மிக சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!