உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி பெண்ணிடம் ரூ.2.5 லட்சம் மோசடி: வாலிபர் கைது
2022-12-08@ 00:07:18

அம்பத்தூர்: வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்தவர் பவித்ரா (26), பொறியியல் பட்டதாரி. இவர், கடந்த 30ம் தேதி வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது தம்பி லட்சுமணனின் நண்பருக்கு தெரிந்தவர் வில்லிவாக்கம் திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சபேஷ் (24). இவர், உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவதாகக் கூறி போலி அடையாள அட்டையை காண்பித்து, கடந்த மார்ச் மாதம் எங்களிடம் அறிமுகமானார். அப்போது, தனக்கு நீதிமன்றத்தில் செல்வாக்கு உள்ளதாகவும், அங்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும் சபேஷ் கூறினார். அதற்கு, ரூ.7 லட்சம் வரை செலவாகும். முதலில் ரூ.3 லட்சம் கொடுங்கள். வேலை கிடைத்தவுடன் மீதி பணத்தை தரலாம் என்றார்.
அவர் சொன்னதை நம்பி இரண்டு தவணையாக மொத்தம் ரூ.2.50 லட்சம் கொடுத்தேன். பின்னர் அதே மாதத்தில் பணி நியமன ஆணையும் சபேஷ் கொடுத்தார். அதை எடுத்துக்கொண்டு உயர் நீதிமன்றத்திற்கு சென்ற பின்புதான், அது போலி என தெரியவந்தது. அதன்பின்னர், சபேசை தொடர்பு கொள்ள முடியவில்லை. விசாரித்தபோது இதேபோல் பலரை சபேஷ் ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து, வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சபேஷை தேடினர். இந்நிலையில், நேற்று அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Tags:
High Court Job Female Graduate Rs.2.5 Lakh Fraud Youth Arrest உயர் நீதிமன்றம் வேலை பட்டதாரி பெண் ரூ.2.5 லட்சம் மோசடி வாலிபர் கைதுமேலும் செய்திகள்
இன்ஸ்டாகிராமில் காதலித்து மணந்த 7 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை: மலையில் இருந்து தள்ளிவிட்ட எஸ்ஐ மகன் அதிரடி கைது
பாடியநல்லூர் சோதனை சாவடி, காஞ்சியில் ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்திய 17.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூன்று பேர் கைது; உரிமையாளருக்கு போலீஸ் வலை
சென்னை அண்ணாசாலையில் சுவர் இடிந்து பெண் பலி மேலும் ஒருவர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது
பார்ட்டிக்கு அழைத்து சென்று மதுவை ஊற்றிக் கொடுத்து 13 வயது சிறுமி பலாத்காரம்: நண்பர்கள் இருவர் கைது
விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!