நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கிய மாணவி
2022-12-08@ 00:07:06

திருமலை: ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், அன்னவர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா(20). இவர் துவ்வாடாவில் உள்ள கல்லூரியில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சசிகலா வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக குண்டூர்- ராயகடா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி துவ்வாடாவிற்கு நேற்று காலை வந்துள்ளார். துவ்வாடா ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது ரயில் நிற்பதற்குள் சகிகலா இறங்க முயன்றுள்ளார். அப்போது, கால் தவறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவில் விழுந்து சிக்கிக் கொண்டார். உடனே, ரயில் நிறுத்தப்பட்டது. அவரது கால் தண்டவாளத்தில் சிக்கியதால் படுகாயமடைந்து வெளியே வரமுடியாமல் தவித்தார். ரயில்வே மீட்பு படையினர், நடைமேடையின் ஒரு பகுதியை உடைத்து சுமார் 1.30 மணிநேரம் போராடி மாணவி சசிகலாவை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் செய்திகள்
புதுகையில் விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு
மல்லிகார்ஜூனேஸ்வரர் சுவாமியை 4,560 அடி உயர பருவதமலையில் ஏறி பக்தர்கள் தரிசனம்: 23 கிலோ மீட்டர் கிரிவலம் வந்தனர்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 146 அடி உயருமுள்ள முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
வடலூரில் 152வது தைப்பூச திருவிழா: 7 திரை விலக்கி ஜோதி தரிசனம்; லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
தெய்வீகத்தின் சன்னிதியில் பாகுபாடு பார்க்க கூடாது: தென்முடியனூர் சம்பவம் தொடர்பாக சத்குரு ட்வீட்
பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருந்தும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிய ஏலகிரி மலை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!