SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலாச்சார பெருமை

2022-12-08@ 00:04:09

தமிழ் மண்ணின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், கடந்த 2017ம் ஆண்டு, மெரினாவில் உருவெடுத்த மாணவர் புரட்சி, மக்களின் எழுச்சியாக மாறி மேலைநாடுகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில், மீண்டும் விலங்குகள் நல அமைப்பு, ஜல்லிக்கட்டுக்கு எதிரான அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நெருங்கி வரும் நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி ஆஜராகி, முன்வைத்த வாதங்கள் அனைத்தும் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமன்றி தமிழகத்தில் என்றென்றும் மாறாத பன்முகத்தன்மைக்கான பெரும் சான்று என்பதும் நிரூபணமாகி உள்ளது.
‘‘இந்தியா ஒரு பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு.

அதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கலாச்சாரம் உண்டு. சிலர் அசைவம் உண்பர். சிலர் சைவம் உண்பர். உணவுக்காக இங்கே விலங்குகள் கொல்லப்படுகிறது. இதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளதே தவிர, உண்ணக்கூடாது என்று சட்டம் சொல்லவில்லை. இந்த உணவு பழக்கம் கூட, ஒருவர் பின்பற்றி வரும் கலாச்சாரத்தால் அவருக்கு உருவாகிறது. இந்த வகையில் தமிழகத்தின் பண்பாட்டோடும், கலாச்சாரத்தோடும் இணைந்து நிற்பது ஜல்லிக்கட்டு,’’ என்பது அவரது வாதம். ஆனால், ஜல்லிக்கட்டு கலாச்சாரம் சார்ந்த விஷயம் என்பதற்கான ஆவணங்களை பரிசீலிக்க கூடாது  என்றது விலங்குகள் நல அமைப்பு. கலாச்சாரத்தை காப்பது அந்தந்த அரசுகளின் கடமை. இதை அரசியல் சாசனம் பிரிவு 29 தெளிவாக கூறியுள்ளது. அந்த அடிப்படையில் ஜல்லிக்கட்டு என்ற தமிழர்களின் கலாச்சாரத்தை காப்பது அரசின் கடமை மட்டுமல்ல,பொறுப்பும் கூட. அதுமட்டுமல்ல, ஜல்லிக்கட்டு என்பது ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது.

இது சிறந்த விளைச்சலை கொடுத்ததற்காக இயற்கைக்கு நன்றி கூறும் விழா. இது ஒரு பொழுதுபோக்கு அல்ல. இதனால் தான் வெளிநாட்டவர் கூட, தமிழர் கலாச்சாரத்தை அறிவதற்கு ஆர்வத்துடன் இங்கு வருகின்றனர். சுடுமண் சிற்பங்களும், தொல்பொருள் ஆய்வுகளும், சங்க இலக்கியங்களும் ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் முழுவிவரங்களை ஆதாரத்துடன் கொடுத்துள்ளது. பல பல்கலைக்கழக ஆய்வுகளும், ஜல்லிக்கட்டு தமிழகத்தின் கலாச்சாரம் என்பதை நிரூபித்துள்ளது. புகழ் ெபற்ற வரலாற்று ஆய்வாளரான ரோமீலாதாபர், தனது புத்தகத்தில் ஒரு இனத்தின் கலாச்சார தொடர்புகள் குறித்து தெளிவாக வரையறுத்துள்ளார். அவை அனைத்திற்கும் ஜல்லிக்கட்டு பொருந்திச்செல்கிறது என்ற அரசு தரப்புவாதம், நீதியரசர்களையே நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

 • new-parliament-pic-20

  பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

 • cong-ravi-19

  தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்