தமிழக- கர்நாடக எல்லையில் ஈரோடு வனத்துறை, வேட்டை கும்பல் இடையே கடும் துப்பாக்கி சண்டை: ஒருவர் கைது
2022-12-08@ 00:03:42

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் பர்கூர் அடுத்த சென்னம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட பாலாறு பீட், வாளாங்குழிப் பள்ளத்தில் துப்பாக்கியுடன் சிலர் நுழைந்துள்ளதாக சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனச்சரகர் ராஜா தலைமையில் வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என 9 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதிக்கு சென்றனர். அங்கு பதுங்கிய கும்பலை சரணடையும்படி வனத்துறையினர் எச்சரித்தனர். ஆனால், கும்பல் வனத்துறையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு வனத்துறையினர் பதிலடி கொடுத்ததால் பாறையின் பின்புறம் சென்று தப்பினர்.
பின்னர் அவர்களை எச்சரிக்கும் வகையில் வனத்துறையினர் துப்பாக்கியால் தரையை நோக்கி சுட்டனர். இதனால் கும்பல் தப்பி ஓடியது. அதில் ஒருவரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர் கோவிந்தபாடியை சேர்ந்த குமார் (40) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், தப்பியவர்கள் கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா (எ) காரவடையான், காமராஜ், செட்டிபட்டியைச் சேர்ந்த பச்சைக் கண்ணன், தர்மபுரி மாவட்டம் ஆத்து மேட்டூரை சேர்ந்த ரவி என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் 2 நாட்டு துப்பாக்கிகளுடன் மான் வேட்டைக்கு சென்றதும் தெரியவந்தது. கும்பல் மறைத்து வைத்திருந்த மான் கறி, பால்ரஸ் குண்டுகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். வனப்பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
படகு போட்டிக்கு அனுமதி மறுப்பு; தடையை மீறி கோவளம் வந்த படகுகள்: குமரியில் போலீஸ் குவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே தைப்பூச திருவிழா கோலாகலம்: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
புதுகையில் விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு
மல்லிகார்ஜூனேஸ்வரர் சுவாமியை 4,560 அடி உயர பருவதமலையில் ஏறி பக்தர்கள் தரிசனம்: 23 கிலோ மீட்டர் கிரிவலம் வந்தனர்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 146 அடி உயருமுள்ள முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
வடலூரில் 152வது தைப்பூச திருவிழா: 7 திரை விலக்கி ஜோதி தரிசனம்; லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!