60 வயதுக்கு மேற்பட்ட 131 பேர் நீக்கம்; அம்மா உணவக ஊழியர்களுக்கு மாற்றுப்பணி குறித்து ஆலோசனை
2022-12-07@ 00:08:48

சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பெண்கள் சமையல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் 60 வயதை கடந்த பெண் ஊழியர்கள் அம்மா உணவகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருவது தெரிய வந்தது. அவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய மாநகராட்சி முடிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. சுயஉதவி குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும் வயது வரம்பு 18 முதல் 60 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 60 வயதை கடந்தவர்கள் எத்தனை பேர் அம்மா உணவகங்களில் பணி செய்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்தியதில் 131 பேர் என தெரியவந்தது. அவர்கள் அனைவரும் கடந்த 1ம்தேதி முதல் பணியில் இருந்து நீக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் ஏற்படும் காலி இடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அம்மா உணவக செயல்பாட்டில் எந்த குறையும் வைக்கவில்லை. ருகிறோம். தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால் செலவை குறைக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முதியவர்களாக இருப்பதால் மாற்றுப் பணி வழங்க முடியுமா என்றும் இதர துறைகளுடன் ஆலோசித்து வருகிறோம் என்றனர்.
மேலும் செய்திகள்
இன்று கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் மறியல்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு
பிரபல இயக்குனர், நடிகர் டி.பி.கஜேந்திரன் திடீர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: இன்று மாலையில் உடல் தகனம்
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
நெல்கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!