சாலை விபத்தில் சிக்கியவரின் கண்ணிலிருந்து 10 செ.மீ மரத்துண்டு அகற்றம்: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
2022-12-07@ 00:08:46

சென்னை: வண்டலூர் பகுதியில் வசிக்கும் முல்லை வேந்தன் என்ற 33 வயது நபர் கடந்த வாரம் சாலை விபத்துக்குள்ளாகி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசினர் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன. இந்நிலையில் அவருக்கு கண்ணில் பார்வைக் குறைபாடு மற்றும் இரட்டை பார்வை இருந்தது பரிசோதனையின் மூலம் தெரியவந்தது.
மேலும் அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் இடது கண்ணில் மரத்துண்டு கண் நரம்பை அழுத்திக் கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. கண் மருத்துவமனையில் இருந்து காது, மூக்கு, தொண்டை நிபுணரின் கருத்தை பெற பரிந்துரைக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கண்ணில் உள்ள மரத்துண்டை மூக்கின் வழியாக என்டோஸ்கோப்பி மூலம் அகற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பார்வை பாதிக்கப்படாமல் அறுவை சிகிச்சை செய்வது என்பது மிகவும் சிக்கலானது.
இந்நிலையில் மருத்துவ கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் வழிகாட்டுதல்படி, 6 மருத்துவர்கள் கொண்ட குழுவால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சுமார் 10 செ.மீ. அளவுள்ள மரத்துண்டு கண்ணிலிருந்து அகற்றப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவருடைய பார்வைக் குறைப்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனையில் செய்யப்படும் என மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர். மேலும் தக்க நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் பார்வை இழப்பு தவிர்க்கப்பட்டது. இதற்கு தனியார் மருத்துவமனையில் பல லட்சங்கள் செலவாகும்.
மேலும் செய்திகள்
துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: இன்று மாலையில் உடல் தகனம்
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
நெல்கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை: முதல்வர் உத்தரவு
பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!