பஸ்சில் ஐபோன் திருடிய ஆசாமியை பிடித்த பெண் காவலருக்கு டிஜிபி நேரில் பாராட்டு
2022-12-07@ 00:08:41

சென்னை: தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணியிடம் ரூ.76 ஆயிரம் மதிப்புள்ள ஐபோனை திருடிய கொள்ளையனை விரட்டி பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். தாம்பரம் காவல் நிலைய குற்ற பிரிவில் காவலராக காளீஸ்வரி பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4ம் தேதி தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணி மேற்கொண்டார். அப்போது, கூடுவாஞ்சேரி செல்லும் மாநகர பேருந்தில் வடமாநில இளைஞர் ஒருவர் ஏறி, பின்னர் சிறிது நேரத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ.76 ஆயிரம் மதிப்புள்ள ஐபோனை பறித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.
இதை கவனித்த காவலர் காளீஸ்வரி, வடமாநில கொள்ளையனை அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு துரத்தி சென்று பிடித்தார். பிறகு அவனிடம் இருந்து விலை உயர்ந்த ஐபோனை பறிமுதல் செய்தார். பின்னர் அவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவனிடம் நடத்திய விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோட்டோ (19) என தெரியவந்தது. செல்போன் கொள்ளையனை சாதுர்யமாக செயல்பட்டு விரட்டி பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
மேலும் செய்திகள்
துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: இன்று மாலையில் உடல் தகனம்
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
நெல்கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை: முதல்வர் உத்தரவு
பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!