புது வகையான 3 சைபர் க்ரைம் குற்றம் குறித்து க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பொதுமக்கள் படிக்கலாம்: சென்னை மாநகர காவல்துறை தகவல்
2022-12-07@ 00:08:35

சென்னை: புது வகையான 3 சைபர் க்ரைம் குற்றங்கள் தடுப்பது குறித்த க்யூஆர் கோடு புத்தகத்தை பொதுமக்கள் செல்போன்களில் ஸ்கேன் செய்து படிக்கலாம் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை மாநகர காவல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சைபர் குற்றவாளிகள் உபயோகிக்கும் 30 குற்ற செயல் வழிமுறைகளை விக்கி ‘முத்துவும், 30 திருடர்களும்’ என்ற தலைப்பில் சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கடந்த மாதம் வெளியிட்டார்.
சைபர் கிரிமினல்கள் அடிக்கடி தங்கள் யுக்திகளை மாற்றி புதுவகையில் மக்களை ஏமாற்றுபவர்கள் என்ற காரணத்தால் அதுகுறித்து தகவல்களை மக்களிடையே உடனுக்குடனே கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் க்யூஆர் கோடு வடிவில் புத்தகத்தை சென்னை மாநகர காவல்துறை கொண்டு வந்துள்ளது. புத்தகம் வெளியிட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், தற்போது 3 சைபர் குற்றங்கள் நடந்து வருகிறது.
* ஆன்லைன் ரம்மி வாயிலாக பண மோசடி.
* காவல் அதிகாரிகள் போல் பேசி மிரட்டி பணம் பறிக்கும் மோசடி.
* வங்கி கணக்கில் இருந்து பணம் தவறுதலாக டெபிட் ஆனதாக கூறி மோசடி.
இதுகுறித்த விளக்க படங்களுடன் குற்ற செயல்வகை முறைகள் தொகுக்கப்பட்டு, அதே க்யூஆர் கோடில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதனை செல்போனில் ஸ்கேன் செய்து படித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: இன்று மாலையில் உடல் தகனம்
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
நெல்கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை: முதல்வர் உத்தரவு
பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!