SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாறுமா மனப்பாங்கு?

2022-12-07@ 00:06:56

இந்தியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, சவுதி அரேபியா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் இணைந்து உருவாக்கிய அமைப்புக்கு ஜி-20 (குரூப் 20) என்று பெயர் சூட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு உறுப்பு நாடு தலைமைப் பொறுப்பை ஏற்று இந்த உச்சி மாநாட்டை நடத்துகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

இதன் மூலம் ஜி-20 மாநாட்டை நடத்தி, அதற்கு தலைமை வகிக்கும் வாய்ப்பையும் இந்தியா பெற்றுள்ளது. இதற்கான அனைத்து கட்சிக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வரின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது. ‘‘காலநிலை மாற்றத்தை தடுப்பதற்காக இந்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இயற்கைப் பாதுகாப்பு இயக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை மாற்றத்தைக் கையாளவும் ‘தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்’ என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனத்தை (spv) உருவாக்கியுள்ளோம். உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களை காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம்’’ - இது முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பேச்சின் ஒரு பகுதி. முதல்வரின் பேச்சில் கவனிக்கப்பட வேண்டிய வரிகளும் இவை தான்.

இந்திய அரசு என்ற ஒற்றுமை உணர்வு வரும் போது தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என்பது நமது முதல்வர் கொடுத்துள்ள செய்தி. அதேசமயம், அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் ஒன்றிய அரசு, இங்கிருக்கும் வளங்கள் மூலம் கிடைக்கும் வரிப் பணத்தை வசூலிப்பதில் காட்டும் வேகத்தை, தமிழ்நாட்டுக்கென்று திட்டங்களை அறிவிக்கும் போது காட்டுவதில்லை. புலி வருது.. புலி வருது... என்பது போல மதுரைக்கு எய்ம்ஸ் இதோ வருகிறது, அதோ வருகிறது என்று தமிழ்நாடு வரும் போது எல்லாம் ஒன்றிய அமைச்சர்களும், அதிகாரிகளும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

தமிழ் குறித்தும், தமிழரின் பெருமை குறித்தும் செல்லும் இடமெல்லாம் பிரதமர் பெருமை படப் பேசுவதாக பலரும் சிலாகித்து கொள்கின்றனர். ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன என்ற கேள்விக்கு இன்றுவரை திடமான பதில் இல்லை. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது தமிழரின் மாண்பு. அதன் படியே தமிழகம் நடந்து கொண்டிருக்கிறது. ‘வீடு இருந்தால் தான், ஓடு மாற்ற முடியும்’ என்று பேரறிஞர் அண்ணா கூறியது போல், கொள்கை ரீதியில் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும், இந்திய நாடு என்று வரும் போது முரண்பாடுகளை தூரமாக ஒதுக்கி வைத்து நாட்டுக்காக முதலில் குரல் கொடுப்பது தமிழ்நாடு தான். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கும் எண்ணத்தை ஒன்றிய அரசு இனியாவது கைவிட்டு, மாநில அரசுகளுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பது தான் அனைத்து மாநிலங்களின் சார்பாக தமிழ்நாடு வைக்கும் ஒரே கோரிக்கை.

Like Us on Facebook Dinkaran Daily News
 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

 • new-parliament-pic-20

  பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

 • cong-ravi-19

  தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்