என்எல்சி நில அளவை பணிக்கு கடும் எதிர்ப்பு ஊருக்குள் நுழைய விடாமல் அதிகாரிகளை தடுத்த மக்கள்: சாலையில் அமர்ந்து போராட்டம்
2022-12-07@ 00:05:43

சேத்தியாத்தோப்பு: என்எல்சி நில அளவை பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி, என்எல்சி நிறுவனம் தனது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் நிலத்தை எடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்தில் நிலம் அளவீடு செய்யும் பணிக்காக நேற்று 2வது நாளாக அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் கிராமத்துக்குள் நுழைந்தனர்.
தகவலறிந்த 200க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை ஊருக்குள் விடாதவாறு சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் நில அளவை பணிகளை கைவிட்டு சென்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், என்எல்சி நிர்வாகத்திடம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, கூடுதல் இழப்பீடு, மாற்று குடியிருப்பு பகுதியாக 10 சென்ட் நிலம், அதில் 1500 சதுரஅடி பரப்பளவில் வீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். விரைவில் பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.
Tags:
NLC land survey work protest officer people road protest என்எல்சி நில அளவை பணி எதிர்ப்பு அதிகாரி மக்கள் சாலை போராட்டம்மேலும் செய்திகள்
வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா
தண்ணீர் வரத்து குறைந்ததால் கவியருவி மூடப்பட்டது
கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது; களக்காடு பகுதியில் 20 வகையான நீர் பறவைகள்
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தனர்
தாளவாடி மலைப் பகுதியில் மின் கம்பத்தை சேதப்படுத்திய காட்டு யானை: சிசிடிவி வீடியோ பரபரப்பு காட்சி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!