இன்குபேஷன் சென்டர்கள் மூலம் ஸ்டார்ட்அப்கள், தொழில்முனைவோர்களை உருவாக்கும் செயல்பாடு சிறப்பாக உள்ளது: அண்ணா பல்கலை அதிகாரிகள் தகவல்
2022-12-06@ 01:03:34

சென்னை: அண்ணா பல்கலை கழகத்தில் இன்குபேஷன் சென்டர்கள் மூலம் ஸ்டார்ட்-அப்கள் மற்றும் தொழில்முனைவோர்களை உருவாக்கும் செயல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என இன்குபேஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிதி ஆயோக்கின் கீழ் 2016ம் ஆண்டு நாட்டில் புதுமை மற்றும் தொழில்முனைவோர் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் மூலம் தொடங்கப்பட்டது தான் அடல் இன்னோவேஷன் மிஷன் (ஏஐஎம்). இதன் மூலம், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் தொழில்முனைவோர்களை உருவாக்கும் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இன்றுவரை, பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுடன் 18 மாநிலங்களில் 68க்கும் மேற்பட்ட அடல் இன்குபேஷன் மையங்களை ஏஐஎம் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.
மேலும், இதுவரை சுமார் 27 ஆயிரம் செயல்பாட்டு தொடக்கங்கள் இந்த அடல் இன்குபேஷன் சென்டர்களால் ஆதரிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 500 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் பெண்கள் தலைமையிலானவை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் 15,000 க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கியுள்ளன. இதில், ஒரு பகுதியாக சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் 5 பேர் கொண்ட குழுவுடன் 2020ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இன்குபேஷன் சென்டரில் 36 கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் புதிய வகை ஆலோசனை அடிப்படையில் ஸ்டார்ட்-அப்கள் செயல்பட்டு வருகின்றன.
தொடங்கப்பட்ட இந்த இன்குபேஷன் சென்டரில் தற்போது 36 கம்பெனிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும் 3 கம்பெனிகள் வெளியே சென்று வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. புதிய தொழில் முறையை தொடங்க இருக்கும் யாராக இருந்தாலும் பல்கலை கழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு இன்குபேஷன் சென்டர் மூலம் தங்கள் முயற்சியை வெற்றியின் பாதையை நோக்கி எடுத்து செல்லலாம் என்றனர்.
Tags:
Incubation Centers Startups Entrepreneurs Activity Anna University Officials இன்குபேஷன் சென்டர்கள் ஸ்டார்ட்அப்கள் தொழில்முனைவோர் செயல்பாடு அண்ணா பல்கலை அதிகாரிகள்மேலும் செய்திகள்
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு: பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டி
இன்று கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் மறியல்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு
பிரபல இயக்குனர், நடிகர் டி.பி.கஜேந்திரன் திடீர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: இன்று மாலையில் உடல் தகனம்
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!