721வது ஆண்டு பெரிய கந்தூரி விழா முத்துப்பேட்டை தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம்: கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
2022-12-06@ 00:53:45

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் சேக்தாவூது ஆண்டவர் தர்காவில் 721வது ஆண்டு பெரிய கந்தூரி விழா கடந்த 25ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான புனித சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று அதிகாலை நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணிக்கு டிரஸ்டிகள் இல்லத்திலிருந்து சந்தனம் நிரப்பிய குடங்களை தர்காவுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதிகாலை 2.30 மணிக்கு புனித சந்தனகுடத்தை தலையில் சுமந்து வந்து கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைத்தனர். அதிகாலை 5 மணிக்கு சந்தன கூட்டிலிருந்து சந்தன குடம் தர்காவுக்கு எடுத்து வரப்பட்டு ஷேக்தாவூது ஆண்டவர் சமாதியில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலத்தின்போது, கனமழை பெய்தது. கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் நனைந்தபடி கலந்து கொண்டனர்.
Tags:
721st year Great Ganduri Festival Muthupet Dargah Sandalwood Procession 721வது ஆண்டு பெரிய கந்தூரி விழா முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்மேலும் செய்திகள்
2.28 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கியது; டெல்டாவில் மழை சேதம் அமைச்சர்கள் குழு ஆய்வு: முதல்வரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு
பிழைப்புக்காக இல்லாமல் எப்போதும் சிவனையே மனதில் வைத்து வாழும் தீவிர பக்தர்: மெய்ப்பொருள் நாயனாரின் மெய்சிலிர்க்கும் பக்தி
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது: சுமார் 2மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்
படகு போட்டிக்கு அனுமதி மறுப்பு; தடையை மீறி கோவளம் வந்த படகுகள்: குமரியில் போலீஸ் குவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே தைப்பூச திருவிழா கோலாகலம்: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
புதுகையில் விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!