பண்ருட்டி அருகே தண்டவாளத்தில் விரிசல் ரயில் விபத்து தவிர்ப்பு: தகவல் கொடுத்த பெண்ணுக்கு பாராட்டு
2022-12-06@ 00:49:36

பண்ருட்டி: பண்ருட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து தகவல் கொடுத்த பெண்ணால், விபத்து தவிர்க்கப்பட்டது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே திருத்துறையூர் கிராமத்தில் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று அதிகாலை விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை அவ்வழியாக சென்ற அக்கடவல்லி கிராமத்தை சேர்ந்த மஞ்சு (22) என்ற பெண் பார்த்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தெரிவித்தார். கடலூர் துறைமுகம் ரயில்வே போலீசார் அங்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது, ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை பார்த்து, அவ்வழியே அதிகாலை 6.30 மணிக்கு செல்லும் விழுப்புரம்- மயிலாடுத்துறை பயணிகள் ரயில் டிரைவருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அந்த ரயில் கடலூரில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்வே பணியாளர்கள் தண்டவாளத்தை சீரமைத்தபின் கடலூரில் இருந்து பயணிகள் ரயில் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. உரிய நேரத்தில் தகவல் அளித்த மஞ்சுவை ரயில்வே போலீசார் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது எப்படி என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:
Panrutti crack in rail train accident avoidance பண்ருட்டி தண்டவாளத்தில் விரிசல் ரயில் விபத்து தவிர்ப்புமேலும் செய்திகள்
2.28 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கியது; டெல்டாவில் மழை சேதம் அமைச்சர்கள் குழு ஆய்வு: முதல்வரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு
பிழைப்புக்காக இல்லாமல் எப்போதும் சிவனையே மனதில் வைத்து வாழும் தீவிர பக்தர்: மெய்ப்பொருள் நாயனாரின் மெய்சிலிர்க்கும் பக்தி
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது: சுமார் 2மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்
படகு போட்டிக்கு அனுமதி மறுப்பு; தடையை மீறி கோவளம் வந்த படகுகள்: குமரியில் போலீஸ் குவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே தைப்பூச திருவிழா கோலாகலம்: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
புதுகையில் விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!